சேதனப் பசளைகளை விற்பனை செய்ய தடுமாறும் சீன நிறுவனம்.

( ஹஸ்பர் ஏ ஹலீம்) நாட்டில் தற்போது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடாக இந்த இரசாயனப் பசளை கிருமி நாசினி தடை ஏற்பட்டுள்ளது இதனை தடை செய்தால் விவசாயிகளின் நிலை மோசமாகி விடும் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் கேள்வி எழுப்பியுள்ளார் .

முள்ளிப்பொத்தானையில் இன்று (30)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

நாடு தழுவிய போராட்டங்கள் இரசாயன தடைக்கு எதிராக விவசாதிகள் வீதியில் இறங்கியுள்ளார்கள் நாட்டின் பொருளாதாரத்தில் 75 வீதமான தேசிய வருமானத்தை நெல் உற்பத்தி வழங்குகிறது இவ்வாறு தடை செய்தால் விளைச்சலில் ஐம்பது வீதத்துக்கும் குறைவான நெல் உற்பத்தியையே பெறலாம்  இரசாயன இறக்குமதியை கட்டுப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காணும் என்பதுடன் விவசாய நிலையும் மோசமாக பாதிக்கக் கூடும். இந்த நாட்டில் சுமார் அண்ணளவாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 573278மெற்றிக் தொன் நெல் உற்பத்தி கிடைக்கப் பெறுவதுடன் 286639 ஏக்கர்களில் செய்கை பண்ணப்படுகிறது இவ்வாறான நிலையில் நாடு சென்றால் அரசி இறக்குமதி ஏற்படும் வாய்ப்புக்களை காண்பதுடன் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக மாறலாம் இதனால் பொருளாதார நிலை ஸ்தம்பிதமடைந்து அதனை கட்டியெழுப்ப முடியாமல் மந்த கதி நிலை ஏற்படும்.புத்தளத்தில் அறுவைக் காடு எனும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பசளை உற்பத்தி சீன நிருவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும் கூட அதனை விற்பனை செய்ய முடியாமல் தடுமாறுகின்ற ஒரு இக்கட்டான சூழ் நிலையும் ஏற்பட்டுள்ளது எனவே தான் இரசாயன உரங்களை திடீர் என தடை செய்யாமல் விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொள்ளுங்கள் என்றார்.