சேதனப் பசளை தயாரிப்பு மூலமான பயிர் செய்கை.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) சேதனப் பசளை தயாரிக்கும் பணி தற்போது இடம் பெற்று வரும் நிலையில் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்கு உட்பட்ட பத்தினிபுரம் கிராம விவசாயி ஒருவரும் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார்.

குறித்த விவசாயி சுமார் இரண்டு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகிறார்.
கத்தரி,வெண்டி,கறி மிளகாய்,மஞ்சல், மா மரம்,தற்பூசனி,தென்னை,வாழை உள்ளிட்ட பல பயிர்ச் செய்கையில் பல வருட காலமாக ஈடுபட்டு வருவதாகவும் இதுவே தங்களது வாழ்வாதாரமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

தற்போது சேதனப் பசளை மூலமே பயிரினங்களுக்கு பசளை இடுவதாகவும் இதனை தயாரிக்க தேவையான விழிப்புணர்வுகளை விவசாயனப் போதனாசிரியர் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நஞ்சற்ற உணவு உற்பத்திக்கு இவ் வகை சேதனை உரங்களே நல்லது என்றும் குறித்த விவசாயி மேலும் கூறினார்.