சுவிஸ் சூக் அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய புதிய நிருவாகசபை

சுவிஸ் சூக் அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய 2021 ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் நிர்வாகசபைத் தெரிவும்  ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சூக் கூன ன் பேர்க் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் திரு சுதாகர் தலைமையில். நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன்  ஆலயம் ஈழத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ஆலய நிதியில், குறிப்பிட்ட ஒரு தொகையை வருடாந்தம் ஒதுக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது
அத்தோடு நிர்வாகத்தில் இளையோர்கள் , பெண்கள் என பலதரப்பட்டவர்களையும் உள்ளீர்த்து , நிர்வாகத்தை அமைத்தமை சிறப்பம்சமாகும். நிருவாகத்தெரிவில்
தலைவராக மீண்டும்  தர்மராஜா சுதாகரும் , செயலாளராக சாந்தரூபன் கரனும் ,
பொருளாளராக ஆறுமுகம் பாலசிங்கம் அவர்களும்  உபதலைவராக காண்டீபன் அமிர்தலிங்கமும் ,
உப செயலாளராக லஸ்சன் சாந்த குமாரும் , நிர்வாக சபை உறுப்பினர்களாக சியாமளா – பரமேஸ்வரனும் , கௌரி  தவராசாவும் இளங்கோ – சிவநேசனும்  ச ச்சிதானந்த மூர்த்தி தியாகராசா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்