கல்முனையில், அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ், ஹூதா உமர்)

அரசாங்கத்தின் பொதுமக்களுக்கு எதிரான சுமைகளை  கண்டித்து அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து  தீப்பந்தம் ஏந்திய அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று மாலை (28) கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது ‘அமைச்சர்கள் சொகுசு வாகனங்களில் அப்பாவி மக்கள் எண்ணை சட்டிக்குள்’ , போதும் போதும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்,  விலை ஏற்றி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கல்முனை நகரில் பிரதான வீதி ஊடான போக்குவரத்தும் நெரிசலாக காணப்பட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.