5 வயது சிறுவன் நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணிக்கு தான் சேமித்த உண்டியல் பணத்தை வழங்கி வைப்பு

(யாக்கூப் பஹாத்)
கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக  அதிகளவான நபர்கள் மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் நிலையில் தானும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று எம் அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக மாறியிருக்கின்றார் இந்த சிறுவன்.
இவரின் மனதில் ஏற்பட்ட இந்த உதவி செய்யும் மனப்பாங்கை புரிந்து  கொண்ட இவரது தந்தை நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியை தொடர்பு கொண்டு தன் மகன் உண்டியலில் சேர்த்து  வைத்த ( 10216/- ) பத்தாயிரத்து இருநூற்று பதினாறு ரூபா பணத்தை குறித்த பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தார்.
சிறிய வயதில் இப் பெரிய விடயத்தை மேற்கொண்டிருக்கும் எஸ்.முஹம்மட் ரிஹான் ஆரி அவர்களுக்கு நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.