வாழ்வாதாரத்தினை இழந்துள்ள குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கான நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரணா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்துள்ள குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கான நிவாரண பொதிகள் லண்டன் வேள்தஸ்ரோ கற்பக விநாயகர் அமைப்பின் நிதி உதவியுடன் நேற்று பழுகாமம் மாவேற்குடாவில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இவ் நிவாரண பொதிகளை லண்டன் வேள்தஸ்ரோ கற்பக விநாயகர் அமைப்பின்; கிழக்கு மாகாண இணைப்பாளரும் சமூக சேவையாளரும் சமாதான நீதவானுமாகிய வீ.ஆர்.மகேந்திரன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு இப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு அகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்வாதாரத்தை இழந்திருந்த முன்னாள் போராளிகளின் மாற்று திறனாளிகள் மற்றும் ஏனைய மாற்று திறனாளி குடும்பங்கள் 100 பேருக்கு இவ் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கபப்ட்டது.

பழுகாமம் நிருபர்

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????