அரசாங்கத்தின் நிர்ணைய விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்.

????????????????????????????????????
 (  எஸ்.சதீஸ் )
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் அமைச்சர்கள் விஜயம் செய்து நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக அரசாங்கத்தின் நிர்ணைய விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தினை சனிக்கிழமை (26ம் திகதி)ஆரம்பித்து வைத்தனர்.
 
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அரசடிச்சேனை நெல் சந்தைப்படுத்தல் நிலையத்தில்  இவ்வருடத்தின் சிறுபோக விளைந்த உலர்த்திய நெல்லினை அரசாங்கத்தின் நிர்ணைய விலையான 56ரூபாய் .50 சதத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு   இராஜாங்க அமைச்சர்  லொஹான் ரத்வத்த, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர், அமைச்சின் செயலாளர்கள் போன்றோர் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக நெல் கொள்வனலை ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கருத்து தெரிவிக்கையில்,
இம்முறை மாத்திரம் விவசாயிகளுக்கு இரசாயணப்பசளை வழங்கப்படும் எனவும் அடுத்த போகத்திற்கு சேதனப் பசளை வழங்கப்படும்  இதனை நாங்கள் இலவசமாகவே வழங்கப்போகின்றோம். ஆகையால் விவசாயிகள் எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் பெரும்பாலும் யூரியா பயன்படுத்தவில்லை, விவசாயிகள் அனைவரும சேதனப் பசளையை பாவித்தே விவசாயத்தை மேற்கொண்டனர்.  விவசாயிகள் நலனுக்காகவே இந்த அரசாங்கம் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்தில் நெல்லின் விலை 30 ரூபா அளவில் போனது இப்போது 56ரூபாவுக்கு எமது அரசாங்கம எடுக்கின்றது. ஆகவே விவசாயிகள் பயம் கொள்ளத்தேவையில்லை.
சிலர் கூறுவார்கள் இரசாயணம் இல்லாமல் பயில் செய்ய முடியாது என்று அது விவசாயிகளுக்கு தெரியும். இந்த இரசாயணங்களை போட்டுப் போட்டு  எவ்வளவே கேன்சர், கிட்னி நோய்களை உருவாக்குகின்றோம் ஆகையால் விவசாயிகளின் மக்களின் நன்மைகருதி இந்த அரசாங்கள் பயணிக்கும் என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????