கிண்ணியாவில் முச்சக்கர வண்டி தீவைத்து எரிப்பு.

(இஃஜாஸ் ஏ பரீட்) திருகோணமலை,  கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா காக்கா முனை பிரதேசத்தைச் சேர்ந்த மனாப் நியாஸ் என்பவருடைய முச்சக்கர வண்டியே இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு தீக்கிரை தாக்கப்பட்டது.

தமது ஜீவனோபாயமாக முச்சக்கரவண்டி தொழிலை மேற்கொண்டு வரும் இவர் தற்பொழுது தொழிலை இழக்க வேண்டிய நிலை துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்

இதேவேளை குறித்த முச்சக்கர வண்டியின் உறவினர் கருத்து தெரிவிக்கின்ற போது

அதிகாலை நேரம் திடீரன சத்தம் கேட்டதனையடுத்து வெளியில் வந்து பார்த்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும்

நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் சில கோழிகள் இருந்ததாகவும் இதனால் அக் கோழிகளும் சேர்ந்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்

குறித்த சம்பவம் தொடர்பாக முச்சக்கர வண்டியின் சாரதி கிண்ணியா பொலிவ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.