காரைதீவு – நிந்தவூர் கடற்கரை வீதி கார்பட் வீதியாக புனரமைப்பு.

(யாக்கூப் பஹாத்) றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் காரைதீவு தொடக்கம் நிந்தவூர் வரையான சுமார் 3.9 மஅ கடற்கரை வீதி காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபாவின் பங்கேற்புடன் இன்று நிந்தவூர் கடற்கரை வீதியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை கெளரவ தவிசாளர் அஷ்ரப் தாஹிர், காரைதீவு பிரதேச சபை கெளரவ தவிசாளர் கிருஸ்னபிள்ளை ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகஸ்தர்கள், உலமாக்கள், கல்விமான்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.