ஊடகவியலாளர்களுக்கு உலருணவு வழங்கிய முஷாரப் எம்.பியின் அனர்த்த நிவாரண நிதியம்.

(நூருள் ஹுதா உமர்) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸாரப் முதுநபின் அவர்களின் தலைமையிலான அனர்த்த நிவாரண நிதியத்தினால் உலருணவுகள் நேற்றிரவு கல்முனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் மற்றும் வசதி குறைந்த மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அனர்த்த நிவாரண நிதியத்தின் மூலம் பல பிரதேச மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலையிலையே சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸாரப் முதுநபின் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பிரதேச ஊடகவியலாளர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு தனவந்தர்கள், நல்லுள்ளம் படைத்தவர்கள் வழங்கும் உதவியினூடக இந்த நிதியம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்