ஓட்டமாவடி பிரதேசத்தில் வீடுவீடாகச் சென்று பி.சி.ஆர்.பரிசோதனை

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் நாளாந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடரில் மீராவோடை கிழக்குப் பிரதேச ஒரு பகுதியில் இன்று (21) வீடுவீடாகச் சென்று பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பகுதியில் நேற்று (20) இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக குறித்த பகுதி மக்களுக்கு இன்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்களிப்புடன் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.