புன்னைக்குடாவிலும் வாகரையிலும் கரையொதுங்கிய கடலாமைகள்.

(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கடற்கரைகளிலும்   இறந்த ஆமைகள் மற்றும் டொல்பின்கள்  கரையொதுங்கியுள்ளன.

கொழும்பை அண்மித்த கடலில் எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் எண்ணைக்கசிவின் தாக்கமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இன்று 21.06.2021  ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் இரண்டு ஆமைகளும் வாகரை கடற்கரையில் மூன்று ஆமைகளும் கரையொதுங்கியதாக  வன சீவராசிகள்  திணைக்கள                சுற்றுவட்ட பொறுப்பதிகாரி அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
இதேவேளை கடந்தசில தினங்களுக்கு முன்னர்       கிரான்குளம் கடற்கரையில் மூன்று ஆமைகளும்       இரண்டு டொல்பின்களும் நாவலடி கடற்கரையில் ஓர் ஆமையும் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இறந்தநிலையில் கரையொதுங்கியுள்ள இந்த பிராணிகள் உடற்கூறு பரிசோதனைக்காக    ம்பாறைக்கு எடுத்துச் செல்லப்பப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆமைகள் பெருமளவில் இறந்து கரையோதுங்குவது இதுவே முதல் தடவையென    வன சீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேசமயம் கிழக்கு மாகாண கடலில்     உயிரினங்கள் இறந்து கரையொதுங்கவதையடுத்து ஏற்பட்ட   சந்தேகம் காரணமாக பொதுமக்கள் கடல் மீன்களை உண்ணுவதற்கு  அச்சம்வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.