காரைதீவு சித்தானைக்குட்டிபுர மக்களுக்கு  உலருணவு நிவாரணம் !

( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு. 3 ஆம்பிரிவில்  சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த சித்தானைக்குட்டிபுரம் மற்றும் மாடிவீட்டுத் தொகுதி மக்களுக்கு  உலருணவு நிவாரணம் நேற்று  வழங்கப்பட்டது.

தொடரும் பயணத்தடை மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பசியைப்போக்க ஆயிஷா அறக்கட்டளை இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
தொடர்மாடித்தொகுதி மற்றும் சித்தானைக்குட்டிபுர   கிராம மக்களுக்கென  உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  உலருணவுப் பொதிகளை நேற்று   வழங்கிவைத்தார்.

நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்களான ச.நேசராசா எஸ்.சசிக்குமார் சமுகசெயற்பாட்டாளர்  வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.அங்குள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு ஒத்துழைத்தனர்.

பயனாளிகள் கருத்துரைக்கையில் ஆயிஷா அறக்கட்டளை நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கின்றஅதேவேளை அதனை இங்கு பெற்றுத்தந்த தவிசாளர் ஜெயசிறில் ஜயாவுக்கும் நன்றிகள் என்று  கூறினர்.