பயணத்தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்மநபா பவுண்டேசன் நிதி வழங்கி வைப்பு

பயணத்தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்மநபா பவுண்டேசன் நிதியுதவியினை இன்று (19) வழங்கி வைத்தனர்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலமையினை குறைப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள பயணத்தடையினால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள கொக்கட்டிச்சோலை, கொக்கட்டிச்சோலை தெற்கு கிராமங்களில் வாழும் தெரிவு செய்யப்பட்ட பெண்தலைமை தாங்கும், வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் 115 பேருக்கு தலா ரூபா 2000/-படி நிதியுதவி செய்யப்பட்டது.

பத்மநபா பவுண்டேசன் தலைமையாளர் மோகன் (யோகி) அவர்களின் நிதி பங்களிப்பில் இவ்வுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.