திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கோவிட் சிகிச்சை உபகரணங்கள் கையளிப்பு.

(கதிரவன்) திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள்
திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இன்று 2021.06.18 மாலை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

திருகோணமலை பொது வைத்திய சாலை நிர்வாகத்தினரால் கோரப்பட்ட 1.5 மில்லியன் பெறுமதி வாய்ந்த உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

வைத்திய இயந்திரங்கள், முகக் கவசங்கள், ஒக்சிஜன் முக கவசங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு அங்கிகள், தொலைக்காட்சி ஆகிய பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி சேகரிப்பின் மூலமாக கொள்வனவு செய்யப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.