கிழக்கு மாகாணத்தில் இயற்கை உர உற்பத்தியை விரிவுபடுத்த ஆலோசனை.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) நாட்டின் விவசாயத்தை முழுமையாக ஒழுங்கமைக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எடுத்த முடிவு தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் இயற்கை உரங்களை உற்பத்தி செய்வதற்கான திறனை ஆய்வு செய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களின் தலைமையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் காலை கலந்துரையாடல் நடைபெற்றது.

திருகோணமலைஇ மட்டக்களப்பு மற்றும் அம்பாரை போன்ற மாவட்டங்களில் விவசாயத்திற்குத் தேவையான இயற்கை உரங்களின் அளவு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. வரவிருக்கும் பருவங்களுக்கு தேவையான உரங்களை உற்பத்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதன் போது அறிவுறுத்தினார்.

மேலும்இ சம்பந்தப்பட்ட தரவுகளை உடனடியாக பிரதேச செயலக மட்டத்தில் சேகரிக்குமாறு ஆளுநர் மாகாண பிரதமச் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

இதற்கிடையில்இ இயற்கை விவசாய உற்பத்தியின் வெற்றிக்கு தொடர்ந்தும் நீர் வளங்கல் வழங்கப்பட வேண்டும் என்பதால் ஆளுநர் மாகாணத்தில் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரை எந்தவித இடையூறும் இல்லாமல் விடுவிக்குமாறு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்துக்கு அறிவுறுத்தினார்.

இவ் நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசிதான பி.வனிகசிங்க, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா, மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், மாகாண விவசாய பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.