உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) நாட்டில் தற்போது நிலவும் கொவிட்19 அசாதாரண சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அண்ணல்நகர் பிரிவில் உள்ள 90 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்று (16)வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பொதிகளை அல்-ஹித்மத்துல் உம்மாஹ் நிறுவன பணிப்பாளர் பாத்திஹ் கஸ்ஸாலி மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கணி ஆகியோர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தனர்.

இப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீன்பிடி விவசாயம் உள்ளிட்ட கூலி தொழில்களை நம்பியே தமது வாழ்கையை நடாத்திச்செல்கின்றனர். பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த பயணத் தடை சட்டத்தால் இந்த மக்கள் தமது வருமானத்தை இழந்து குடும்பத்தை வழி நடாத்த பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இவ்வாறான பல பிரதேசங்களை நாம் திருகோணமலை மாவட்டம் முழுவதும் அடையாளம் கண்டுள்ளோம். அந்த பிரதேசங்களுக்கும் எதிர்காலத்தில் எம்மாலான உதவிகளை செய்யலாம் என எதிர்பார்த்துள்ளோம்.

இனஇ மதஇ பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் கஷ்டப்படும் மக்களுக்கான எமது பணிகள் தொடரும் என்றும் இதன் போது நிறுவன பணிப்பாளர் தெரிவித்தார்.