களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதியர்கள் வீதியில் இறங்கிப்போராட்டத்தில்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அரசாங்க தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் தொழிற்சங்க நடவடிக்கையை இடையூறு செய்தது மட்டுமன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட தாதியர்களை மேலதிக நேர அனுமதியினை மறுத்தல் மற்றும் தேவை இருந்தும் ஓய்வு விடுமுறை தினங்களில் வேலை செய்வதற்கு அனுமதிக்காமல்  போன்ற காரணங்களை முன்வைத்து  தாதிய உத்தியோகத்தர்கள்  நேற்று வீதியில் இறங்கி பதாகைகளை ஏந்திய வண்ணமும் சுலோகங்களை தெரிவித்தும்  தமது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ..