சர்வமத தலைவர்களுக்கான கொரானா அனர்த்த நன்கொடைத் தொகை வழங்கும் வைபவம்.

(எப்.முபாரக்) அல் ஹித்மதுல் உம்மாஹ் நிருவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் சர்வமத தலைவர்களுக்கான கொரானா அனர்த்த நன்கொடைத் தொகை வழங்கும் வைபவம் இடம் பெற்றது.

இதன் போது சர்வமதத் தலைவர்களுக்கான உதவித் தொகையாக ரூபா 50,000.00 வழங்கி வைக்கப்பட்டது. இத்தொகையை அல் ஹித்மதுல் உம்மாஹ் நிருவத்தின் பணிப்பாளர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சர்வமத சார்பில் மொரவாவ பெளத்த விகாராதிபதி களுத்துர சோமசிறி தேர்ர்இ கோமரங்கடவெல விகாராதிபதி தம்மானந்த தேர்ர் ஆகியோரும் இந்து மத சார்பில் சுவாமி கிரிஷ்ணா ஷர்மா அவர்களும் கிரிஸ்தவ மத சார்பில் தந்தை நொய்ல் இமானுவேல் அவர்களும் இஸ்லாமிய சமயம் சார்பாக திருகோணமலை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் கலாநிதி ஏ.ஆர் நசார் மற்றும் ஏ.ஜே.எம்.றியாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் ஜனாப் கனி அவர்களும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் மெளலவி எம்.ரீ.ஹபீபுல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சமயத் தலைவர்களின் ஆசியுரையும் வாழ்த்துரையும் இனிதே இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாத்திஹ் அவர்கள் தனது நிருவனம் கடந்த காலத்திலும் தற்போதைய சூழலிலும் இன மத மொழி வேறுபாடுகளிக்கு அப்பால் சென்று சமூக பணிகளை மேற்க் கொண்டு வருகின்றது எனவும் எதிர் காலங்களிலும் பாரிளவிலான சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இதன் போது தெரிவித்தார்.