கிரான் பறக்கியா மடு மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு.

(ந.குகதர்சன்) வாழைச்சேனை பாரதி கலை இலக்கிய மேம்பாட்டுக் கழத்தின் ஏற்பாட்டில் தங்கராஜா ராசலெட்சுமி தம்பதிகளின் மகன் ரோஹன்(கனடா) அனுசரணையில் கிரான் பிரதேச பறங்கியாமடு கிராமத்து 180 குடும்பங்களுக்கான 1500ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா கிருமித்தொற்று பரவலால் வீடுகளுக்குள் முடங்கி சுயதொழில் வாய்ப்பையும் இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள மீனவக் குடும்பங்களுக்கு பிரதேச கிராம சேவகரின் வழிகாட்டலில் இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பணியில் கழக உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.