மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

(ரீ.எல்.ஜவ்பர்கான்) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளையின் தாயான 52 வயதுடைய ந.பிரமராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த பெண் சம்பவதினமான நேற்று மாலை வழமைபோல தனது வெள்ளரி தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு நீர் பம்பில் மின்சாரத்தைக் கையாண்ட போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.