கொரனா தடுப்பு செயற்திட்டத்திற்காக முனைப்பின் உதவிக்கரம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள கொரனா அவசர சிகிச்சை நிலையத்தின் பாவனைக்கென முனைப்பு நிறுவனத்தினால் ஒருமில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மாணிக்கப்போடி குமாரசாமி தெரிவித்தார்.

14.6.2021 ஆம் திகதி மாவாட்ட கொரோணா செயலணி கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது  குறிப்பிட்ட உபகரணங்களை  முனைப்பின் இலங்கைக்கிளைக்கான தலைவர்  மாணிக்கப்போடி சசிகுமார் செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோரால்  மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் முன்னிலையில் பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் நாகலிங்கம் மயூரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில் பாதுகாப்புத்தரப்பின் உயர்அதிகாரிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.