பயணத்தடையின் போது மனித நேயத்தோடு செயற்பட்ட விசேட அதிரடிப்படையினர்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரின் மோட்டார் சைக்கிலை பழுதுபார்த்து வழியனுப்பி வைத்த மனிதபிமான சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலிருந்து கல்முனை பகுதிக்கு வெள்ளரிப்பழம் விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரின் மோட்டார் சைக்கில் (14) வீதியில் வைத்து திடீரென பழுதடைந்துள்ளது. இதனையடுத்து வியாபாரி செய்வதறியாது வீதியில் தடுமாறி தவித்தவேளை குறித்த வீதியினால் சென்ற விசேட அதிரடிப்படையினர்  உடனடியாக செயற்பட்டு அவரது மோட்டார் சைக்கிளை பழுதுபார்த்து அனுப்பிவைத்தனர்.

மனிதாபிமானத்துடன் செயற்பட்ட படை வீரர்களுக்கு பொதுமக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.