ஏறாவூர் பிரதேச செயலாளர் தனிமைப்படுத்தப்பட்டார்.

(ஏறாவூர் நிருபர் நாஸர்)ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் வாகன சாரதிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் சுயதனிமைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச செயலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பிரகாரம் அவருக்கு இதுவரை தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவருக்கும் அவரது குடும்ப உறவினர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏறாவூர்ப் பிரதேசத்தின் பணிகள் ஏனைய அதிகாரிகள் ஊடாக தங்கு தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருவதாக அறிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப்பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வாழும் ஒரு தொகுதி குடும்பங்களுக்கான நிவாரணப்பொதிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

ஏனைய குடும்பங்களுக்கு விரைவில் உலருணவுப்பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.