மட்டக்களப்பு பிறண்டெக்ஸ் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

 

(ரீ.எல்.ஜவ்பர்கான்) மட்டக்களப்பு மாவட்டததிலுள்ள மிகப்பெரிய ஆடைத்தொழிற்சாலையான தாளங்குடா பிறண்டெக்ஸ் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு இன்று(13) கொரோனா தடுப்பூசகள் வழங்கப்பட்டன..சுமார் 500 பேர் இன்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணியகம் தெரித்துள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 3000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் கடமை புரிகின்றனர்.அண்மையில் ஏற்பட்ட கொரோனா தொற்றையடுத்து நூற்றிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா தொற்றிற்கு இலக்காகினர்.இதனால் ஆடைத் தொழிற்சாலை இரு வாரகாலம் வரை மூடப்பட்டிருந்தது.

இத்தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.