ஹெல்ப் எவர் அமைப்பினால் நிவாரணப்பொதிகள்

ருத்திரன்
 நாட்டில் முடக்கல் நிலை ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு துன்பத்திற்குள்ளாகியுள்ள மக்களுக்கான உலர் உணவு விநியோகம் செய்யும் நடவடிக்கை மட்டக்களப்புகிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ‘ஹெல்ப் எவர்;’  அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

கிரான்,கோரகல்லி மடு,சந்தி வெளி,முறக்கொட்டான்சேனை ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வுலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,உதவிப் பரதேச செயலாளர் எஸ்.யோகராசா,மற்றும் இயற்கை மொழி அமைப்பின் உறுப்பினர்.காயத்திரி ஆகியோர்கள் இவ்வுலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்