ஏறாவூரில் களமிறக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் படையணி.

(ஏறாவூர் நிருபர் நாஸர்)

ஏறாவூர் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச்செல்வதையடுத்து                           பொலிஸ் மற்றும்  இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் விசேட படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் கொவிட்-19  தாக்கத்தினால்                  ஏழுபேர் மரணமடைந்துள்ளதுடன்                                ஒரேநாளில் முப்பதிற்கு மேற்பட்ட  தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஏறாவூர் நகர பிரதேசத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படையினரும் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் முடக்கப்பட்ட பகுதியில்  வீட்டைவிட்டு             வெளியேறுவோரைக் கண்காணிப்பதுடன்                         வீதிகளில் அவசியமற்றமுறையில் நடமாடும் நபர்களைக்கைது செய்து பீசீஆர் பரிசோதனைக்கு முன்னிலைப்படுத்துகின்றனர்.
இதேவேளை ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில்  பீசீஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருவதாக              வைத்தியதிகாரி சாபிறா வசீம் தெரிவித்தார்.