பேரிடரின்போது பெருமனதுடன் பேருதவி: பெருநன்றிகள்

நிவாரணம் வழங்கியவருக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ரங்கநாதன் புகழாரம்!(வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய நாவிதன்வெளி பெருநிலப்பரப்பில் சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதராத்தையிழந்த ஒரு தொகுதி மக்களுக்கு உலருணவு நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதெச செயலாளர் என்  .ரங்கநாதன் விடுத்தவேண்டுகோளையேற்று பிரபல சமுகசெயற்பாட்டாளர் கி.ஜெயசிறில் இந்நிவாரணத்தை வழங்கிவைத்தார்.

நாவிதன்வெளிப்பிரதேசத்திலுள்ள மத்தியமுகாம் அன்னமலை சொறிக்கல்முனை  கிராம மக்களுக்கென உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை நேற்று  வழங்கிவைத்தார்.
இவ் உலருணவுப்பொதிகள் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ரங்கநாதன்  முன்னிலையில் கையளிக்கப்பட்டது. வாழ்வாதராத்தையிழந்த அறநெறிஆசிரியர்கள் முன்பள்ளிஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இந்நிவாரணப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

ஆயிஷா அறக்கட்டளை நிதிய அனுசரணையின்கீழ் இவ்வுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமகால பேரிடரின்போது எமது வேண்டுகோளையேற்று பெருமணதுகொண்டு பேருதவி புரிந்த நல்லஉளள்ங்களுக்கு எமது நன்றிகள்.கடந்த 15நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட எமது கிராம மக்களுக்காக முதன்முதலில் சமூக செயற்பாட்டாளர்கள் தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உயிரைத் துச்சமென மதித்து காரைதீவிலிருந்து இங்குவந்து இவ்வுதவியை எமக்கு வழங்கிவைத்தமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்என பிரதேசசெயலாளர் ரங்கநாதன்  அங்கு நன்றிகூறினார்.