மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் கவனயீர்ப்பு ஆர்பாட்டம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)மருதமுனை பிரதேச வைத்தியசலையில் கடமையாற்றும் சுகாதாரர பணியாளர்கள் இன்று (11) வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழஎனை-19 கொரோனா தொற்று நோய்கு மத்தியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு சேவையாற்றும் தமக்கு மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவுகள், முறையான மேலங்கிகள், பாதுகாப்பான முகக்கவசம் மற்றும் ஊழஎனை-19 விசேட சலுகைகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இவற்றை உடனடியாக வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு பதாகைகளை ஏந்தி கோசம் எழுப்பியவாறு சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோயாளர்களுடன் முதலில் தொடர்பை பேனுவது சுகாதார பணியாளர்களான நாம்தான். எமக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவது போன்று எமது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இதன்போது முன்வைத்தனர்.

குறித்த இந்த ஆர்பாட்டம் காரணமாக இன்று (11) காலை 7.00 மணி தொடக்கம் பகல் 2.00 மணிவரைக்கும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் சேவைகள் தடைப்பட்டு காணப்பட்டன.