மட்டு ஆடைத்தொழிற்சாலையில்கொவிட் தொற்றுக்குள்ளான யுவதியின் தாயார் கொவிட் தொற்றில் மரணம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நான்கு கொவிட் தொற்று மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதில் மட்டக்களப்பு  ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும்  கொவிட் தொற்றுக்குள்ளான சந்திவெளி பாலிப்போடியார் வீதியைச்சேர்ந்த யுவதியின் தாயார் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் பற்றி தெரியவருவதாவதுஇவரது மகள்    ஆடை  தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்
இவருக்கு 25/05/2021 அன்று இடம்பெற்ற RAT பரிசோதனையின் போது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். இதனை தொடர்ந்து  இவருடன் வீட்டில் வசித்த 9 பேர் RAT பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  இவர்களில் 7 பேர் நோயாளராக அடையாளம் காணப்பட்டனர் .
இவரது தாயார்  அன்று தொற்றாளராகஅடையாளம் காணப்படவில்லை.
அதன் பின் இவர் இவரது மகன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இவருக்கு வேறுசில நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் கடந்த  30/05/2021 அன்று மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  வைத்தியசாலையில் அவர் கொரனா நோயாளியாக இனம் காணப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்றுவந்த  இவர்  நேற்று (10/06/202)1 அன்று மரணமடைந்துள்ளார்..