சட்ட விரோத மது விற்பனையாளர்கள் கைது.

 

(ஏறாவூர் நிருபர்- நாஸர்)பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த ஐந்துபேர் ஏறாவூர்ப் பொலிஸாரினால் நேற்று 10.06.2021 கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ஒருதொகுதி மதுபானபோத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் எச்எம். ஷியாம் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் ஐயன்கேணி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது இச்சட்டவிரோத செயற்பாடு முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.