(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா 3ம் அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மண்முனை மேற்கு சுகாதார வைத்தியர் பிரிவில் வியாழக்கிழமை (10) ஆரம்பமானது
மண்முனை மேற்கு பிரதேச செயலகப் சுகாதார பிரிவுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிதேசத்திலுள்ள பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவததினர் மற்றும் மக்களுடன் நேரடி தொடர்புய பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் போன்பருக்கு முதற்கட்டமாக மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்தியர் தலைமையிலான சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்களால் சினோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இன்றைய தினம் இப் பிரதேசத்தில் 270 நபர்களுக்கு இத் தடுப்பூசி ஏற்றுவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும் இப்பணி நடைற்று வருவதாகவும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்