கல்முனையில் சுமுகமான முறையில் அரச, தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) தற்போது நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தடைகளின்றி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவறுத்தல்களுக்கு அமைய (10) நாடுபூராகவும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

கல்முனை நகரில் அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் இன்று சுமுகமாக வழங்கப்பட்டன. இதன்போது சுகாதார சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டு ஓய்வூதியம் பெறுவோர் தங்கு தடையின்றி தமது கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டனர்.

வங்கிகளுக்கு முன்னால் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபட்டதுடன் ஓய்வூதியம் பெற வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.