உற்பத்தி  பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை.

( வாஸ் கூஞ்ஞ) பசுமையான நாடு நஞ்சு விசமற்ற நாளை என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய சேதனப் பசளை உற்பத்தியாளர்களை பதிவு செய்யும் தேசிய வேலைத்திட்டமானது 07.06.2021 தொடக்கம் 18.06.2021 வரை சகல கமநல சேவைகள் நிலையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இவ் திட்டம் மன்னார் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக மன்னார் பெரிய கரிசல் விவசாயி அப்துல்லா ஜிப்ரி தெரிவிக்கையில்

நான் சேதனப் பசளையை உற்பத்தி செய்து இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றேன். தற்பொழுது மிளகாய். வெத்திலை, மஞ்சள் போன்ற பயிர்களை இயற்கை பசளையைக் கொண்டே செய்து வருகின்றேன்.

இரசாயண பசளைகளை முற்றாக தவிர்த்து தன்னால் உற்பத்தி செய்யப்படும் கூட்டுப்பசளையைக் கொண்டே பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன்.

தற்பொழுது கொரோனா காரணமாக தன்னால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாது இருந்து வருகின்றது. கொரோனா காலத்துக்கு முன் தனது விவசாய உற்பத்தியை கொழும்பு மற்றும் மன்னார் சந்தைகளுக்கும் சந்தைப்படுத்தினேன்.

ஆனால் இயற்கை சேதனப் பசளையில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருளுக்கேற்ற சந்தை வாய்ப்பு இல்லாதது கவலை என இவர் தெரிவித்தார். இருந்தும் விவசாய திணைக்களம் இதுவிடயமாக கவனம் செலுத்தி வருவதும் தெரியவருகின்றது.