செட்டிபாளையம் சிந்தனைச் செல்வன் கவிஞர் மயில்வாகனம் அவர்களின் 31வது சிரார்த்ததினம்.

அறிமுகம்:-

கிழக்கிலங்கை மட்டக்களப்பு நகரின் தெற்கே 12 மைல் தொலைவில் உள்ளது செட்டிபாளையம் என்னும் கிராமம். கிழக்கிலங்கை வரலாற்று பொக்கிஷம் என்னும் மட்டக்களப்பபு மான்மியம் இக்கிராமத்தை சேர்ந்த கணபதிபிள்ளை புலவரிடமிருந்து கிடைக்கப்பெற்றது என எவ் எக்ஸ் நடராசா குறிப்பிடுகின்றார். அத்தகைய புகழ் பெற்ற இக்கிராமத்தின் கிழக்கு பிரதேசம் பெருங்கற்காலப்பபண்பாட்டின் எச்சங்களை கொண்டதாகும். இக்கிராமத்தின் கருமண் பிரதேசம் எனக்கூறப்படும் பகுதியில் நாகர் காலத்தில் வாழ்ந்தோருடைய சமயப்பண்பாட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு தொல்பொருள் பிரதேசமாகவே இன்றும் காணப்படுகின்றது.

கிராமத்து புலமைத்துவம்:-

இக்கிராமத்து புலைமைத்துவத்தின் எச்சங்கள் கணபதிப்பிள்ளை புலவர்,சின்னவப் புலவர் ஆகியோரின் படைப்புக்களில் மிளிரும். அதேவேளை தமிழ்த்தொண்டாற்றிய ஈழத்துபூராடனார் க.த.செல்வராஜகோபால் பிறந்த கிராமமும் இதுவேயாகும்.

புதுமைக்கவியின் புலமைச்சூழல்:-

இத்தகைய மரபுவழி இலக்கிய படைப்புக்களையும் மரபுவழி கலைகளையும் புதியமாற்றத்துடன் முன்வைத்த பெருமை மயில்வாகனம் புலவரையே சேரும். கவியாக்கத்தில் தனித்துவ பண்பு பெற்றதாலே புதுமைகவி என்னும் சிறப்புப் பட்டத்தை பிரதேச கலா மன்ற விழாவில் பெற்றுக்கொண்டார்.

 

கவிதைக்குள் கவிஞன்
………………

செட்டிபாளையத்து கவிஞனுக்கு கவிதையால் காணிக்கை
மயில்வாகனன்
மரபுக்கும் நவினத்திற்கும் பாலம்
வாழ்வும் ஏழ்மையும்
அவரின் கவிநிலம்
சிரிப்ப்பொலி வெடிக்கும் சிருங்காரம் அள்ளிக்கொட்டிய அதிரச கவிதைகள் சின்னப்பிள்ளை சீறாதடி என்பதில் ஓடுமம் கிராமரசம்
வெறும் தேத்தண்ணி ஒன்று கொண்டுவாடி
அன்பின் குழைவு என்னைப்பற்றி தெரியாதோடி
அங்கத கவிச்சுவை இருந்தாப்ப கை எறிந்திடுவன்
ஆண்மகன்
கவிதைக்குள் முகங்காட்டும் கவிஞரின் எழுத்தாழங்கள்
கவிபாடி மகிழும் வானம்பாடி

கவிஞனுக்குள் கவிதை
கவிதைக்குள் கவிஞன் கவிதையை படி உடைத்துப்பார்
உரக்கச்சொல்லு
பிரித்து வாசி
கவிதை இதழ்களில் கவிஞனின் சிரிப்பு
வாழ்வே கவிதை கவிதைக்குள் வாழ்வு
செட்டியூர் சிந்தனைச் செல்வனின் வாழ்வே கவிதையாகின்றது

எந்தநேரம் பார்த்தாலும் ஏதோ ஒன்றை கையில் வைத்து சிந்தனையில் இருக்கிறீங்க கவிஞனே தலைவனாய் தலைவியாய் உறவாடி கவிஞரின் வீடு கலைக்கூடம் மாலை நேரம் ஏடுபார்ப்பவர்
மத்தளம் அடிப்போர்
நாடகம் நடிப்போர்
ஆடுவோர் பாடுவோர் சங்கமமாக சரித்திரம் படைத்தோர்.