விசேட தேவையுடையோர்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோருக்கு உலர் உணவு பொதிகள் செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் ஜெபராஜா பிரின்ராஜ்குமாரின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு மேற்கு விசேட பிரிவினர் இவ்வுலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
அரசடித்தீவு, முதலைக்குடா, வவுணதீவு, கொல்லநுலை ஆகிய பகுதிகளில் உள்ள 62 குடும்பங்களுக்கு ரூபா 2000பெறுமதியான உலர் உணவு பொதிகள், இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.