கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குள காட்டுப் பகுதியில் இறந்த நிலையில் உடலம் மீட்பு

(ஹஸ்பர் ஏ ஹலீம்)தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம் காட்டுப் பகுதியை அண்டிய பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக இன்று (08)மாலை 5.30 மணியளவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 30_35 வயது மதிக்கத்தக்க ஆண் கொம்பன் யானை எனவும் எட்டு அடி உயரமும் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேலை குறித்த யானையானது இரு வாரங்களுக்கு முன்னர் பன்றிக்கு வைக்கும் சோளவ வெடியை உட்கொண்டு தொண்டையில் சிக்கியதன் காரணமாக உணவு சாப்பிட முடியாது இறந்திருக்கலாம் என வன ஜீவராசிக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டரை அடி நீளம் கொண்ட தந்தத்தை உடைய இந்த யானை அப்பகுதியில் நடமாடியதாகவும் தெரிவித்தனர். யானையின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனஜீவராசி அதிகாரிகளுடன் இணைந்து தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்