தம்பலகாமத்துக்கு ரூபா 250,000.00 பெறுமதியான உலர் உணவு வழங்கல்.

தம்பலகாமம் பிரதேச செயலாளரது வேண்டுகோளுக்கு அமைய அப்பிரதேச செயலாளர் பிரிவில் கோவிட் 19 தொற்றுக் காரணமாக இன்னலும் மக்களுக்கு வழங்கும் பொருட்டாக 250,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களைத் வைரமுத்து இரவீந்திரன் தலைமையில் இயங்கும் கனடாத் திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியது.

கனடாத் திருகோணமலை நலன்புரிச் சங்கக் பொறுப்பாளர் சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று (8) 250,000.00 பெறுமதியான மேற்படி உலர் உணவுப் பொருட்களைத் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி அவர்களிடம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வைத்துக் கையளித்தார்.

இதற்கான அனுசரணையைக் கனடாத் திருகோணமலை நலன்புரிச் சங்க உறுப்பினர்களான  .இலட்சுமவாசன் சி .சிறீதரன் இத இரகுநாதன் ஆகியோர் வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதம முகாமைத்து உதவியாளர் மஹிந்த வனசிங்க அவர்களும் பங்கேற்றார்.