கோறளைப்பற்று மத்தியில் மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் ஐவர் மரணம்.

(ந.குகதர்சன்)கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றின் காரணமாக ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பினி பெண் ஒருவரும்இ பிறைந்துறைச்சேனை அறபா வீதியை சேர்ந்த 51 வயதுடைய சிறுநீரக நோயாளி ஒருவருமாக இரண்டு பேர் மரணமடைந்தனர்.

அத்தோடு திங்கள்கிழமை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மரணமானதுடன்இ 74 வயதுடைய அவரது மனைவி நேற்று திங்கள்கிழமை இரவு மரணமடைந்ததுடன்இ வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் மரணமடைந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் காரணமாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் இதுவரையில் ஐந்து பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.