பி.சி.ஆர் என்றதும் வெறிச்சோடும் வீதிகள்!

(எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில்இ வீதிகளில் நடமாடும் நபர்களை கட்டுப்படுத்த குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதியோரங்களில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளை கேள்விப்படும் நபர்கள் வீதிகளுக்கு வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனால் குறித்த பிரதேச வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.