உலக சுற்றுச் சூழல் தினத்தில் மரநடுகைச் செயற்திட்டம் முன்னெடுப்பு.

 

இலங்கையின் நதிப் படுகைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘சுராகிமு கங்கா’ திட்டத்தை வலுப்படுத்தும் முகமாகவும்இ இலங்கையின் நதி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்குடனும் உலக சுற்றுச்சூழல் தினத்தில்   நதிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டம்’ எனும் தொனிப்பொருளிலாலான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டமானது இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தவகையில் மட்டக்களப்பு வாவிக்கரையோர பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்றைய தினம் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் புளியந்தீவு வாவைக்கரை வீதி 02 வாவியோரம் தெரிவு செய்யப்பட்டு அங்கு முதற்கட்ட மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

மண்முனை வடக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சஜித் தலைமையில் புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இம்மரநடுகை நிகழ்வில்இ மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆர்.பிரவீன், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் லவன், ரிதம் இளைஞர் கழக தலைவர் சில்வயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொரோனா நிலைமைகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினரே இந்நிகழ்வை மேற்கொண்டிருந்தனர் என்பதுடன்இ இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் நாயகம் இச்செயற்பாட்டினை இணையவழி ஊடாக நேரடியாக கண்காணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.