உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தீவிரம்.

 

(பாறுக் ஷிஹான்)அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இஸ்லாமபாத் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்லவராசா கஜேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று (5) வழங்கி வைக்கப்பட்டது .

இவ்வுலருணவு பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இளைஞர் தலைவர் துசானந்தன் தலைமையிலான குழுவினர் வீடு வீடாக சென்று விநியொகித்து வருகின்றனர்.

குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் சுமார் இதுவரை 200க்கும் அதிகமான தமிழ் பேசும் குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.