கொரொனா தொற்றால் குணமடைந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீடு திரும்பியுள்ளார்

   எப்.முபாரக் 
கொவிட் 19 கொரோனா தொற்றால் அங்கொட ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கபில அத்துக்கோரல பூரண குணமடைந்து இன்று(5) திருகோணமலைக்கு வீடு திரும்பியுள்ளார்.

கடந்த மாதம் கொரோனா தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் அங்கொட ஐடிஎச் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே குணமடைந்து திரும்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பூரண குணமடைய சேருவில,மற்றும் பௌத்த விகாரைகளின் விசேட பௌத்த ஆராதனைகள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.