வவுணதீவில் பயணத் தடையில் முடக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமூக ஆர்வலர்களால் உலர் உணவுப் பொதிகள்

எஸ். சதீஸ் –

கொவிட் தாக்கத்தால் அன்றாடம்  வாழ்வாதாரத்தை இழந்து பயணத் தடையில் முடக்கப்பட்ட மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு சமூக ஆர்வலர்களால் சனிக்கிழமை (05) உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது

இதன்போது மன்முனை மேற்கு, வவணதீவு பிரதேசத்திலுள்ள கூழாவடிச்சேனை, நெடியமடு ஆகிய இரண்டு கிராமங்களுக்கு மட்டக்களப்பில் 93ம் வருடத்தில் உயர்கல்வி கற்ற சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து இவ்வுதவியை செய்துள்ளனர்.

புனித மிக்கல் கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 1993ல் உயர்தரம் கல்வி பயின்ற மாணவர்களை ஒன்றினைத்து மட்டக்களப்பு நண்பர்கள் ’93 எனும் பெயரில் பல சேவைகளை மட்டக்களப்பில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது