சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டியில் கொரோனா தீவிரம்:

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)சம்மாந்துறை புதிய வளத்தாப்பட்டி கிராமத்தில் உள்ளவர்கள் ஏனைய பிரதேசங்களுக்கு உதவி செய்வதற்காக சுத்திகரிப்பு உட்பட பல்வேறு வேலைகளில் ஈடுபடுபவர்கள். அவர்களோடு பழகுபவர்கள் தொடர்பில் உள்ளவர்கள் மிக அவதானமாகச் செயற்படுமாறு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

புதிய வளத்தாப்பட்டி கிராமத்திலே அதிகமான தொற்றாளர்கள் தற்போது இனங்காணப்பட்டு வருகின்றார்கள். இப் பிரதேசத்தில் இருப்பவர்கள் பல்வேறு ஊர்களுக்கும் தொழிலுக்காகச் சென்று வருபவர்கள். எனவே இவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் மற்றும் தற்போதும் தொடர்பில் உள்ளவர்கள் மிக அவதானமாகச் செயற்படுமாறும் தற்போது அங்கு மக்கள் வெளியேற முடியாவிட்டாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் அவதானமாகச் செற்படுவது காலத்தின் கட்டாயம் என்றும் கேட்டுள்ளார்.

இதேவேளைஇ சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகள் நேற்று வியாழன் (03) முதல் முடக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக அங்கு கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரித்துஇ 1 மரணமும் சம்பவித்துள்ளதன்; காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இந்தப் பிரதேசத்தை முடக்க வேண்டிய நிலை எற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பரவலின் 3 ஆவது அலையின் போது ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் குறைவாக அடையாளம் காணப்பட்டாலும் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்றின் பரம்பல் அதிகரித்துள்ளதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான முடக்க நிலை அமுல்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளதாகவும்; தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கல்முனை சுகாதார பிராந்திய எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சம்மாந்துறை (புதிய வளத்தாப்பிட்டி) 34 பேர்இ இறக்காமம் 05 பேர், நிந்தவூர் 02 பேர்இ காரைதீவு 1 பேர், அட்டாளைச்சேiயில் ஒருவருமாக மொத்தமாக 43 பேர் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாலமுனை வைத்தியசாலையில் 90 தொற்றாளர்களும் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 79 தொற்றாளர்களுமாக 169 தொற்றாளர்கள் 3 அலையின் பின்னர் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் திருகோணமலை 46, மட்டக்களப்பு 95, அம்பாறை 14 கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட பிரதேசத்தில் 43 பேருமாக 198 கொரோனா தொற்றாளர்கள் மேலதிகமாக இனம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை 02 உம் மட்டக்களப்பில் ஒருவருமாக 03 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஒருவாரத்தில் 1458 தொற்றாளர்களும் 26 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

3ஆவது அலையின் காரணமாக இதுவரை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் 5714 தொற்றாளர்களும் 126 மரணங்களும் இடம்பெற்றுள்ளதென கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்துக்குள் 3297 தொற்றாளர்கள் மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். 1683 பேர் குணமடைந்துள்ளனர். 42 மரணங்கள் பதிவாகியுள்ளன. 3297 பேரில் 364 பேர் உள்நாட்டிலும், 33 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

இதுவரை இலங்கையில் மொத்தமாக 195இ844 இனங்காணப்பட்டுள்ளதோடு 162397 சுகமடைந்துள்ளனர். 1608 மரணமடைந்துள்ளதோடுஇ 31839 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகில் கடந்த 24 மணித்தியாலயத்துக்குள் 5 இலட்சத்துக்கு மேற்பட்டோர் சுகமடைந்துள்ளனர். 475000 பேர் மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். 10303 மரணங்களும் பதிவாகியுள்ளன.