எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் 3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

 

(எஸ்.சபேசன்)தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்களுக்கு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (எஸ்டா )  3 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைப்பின் தலைவர் சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது சொந்த நிதியின் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் வசதிகுறைந்த பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 3 ஆம் திகதி இடம்பெற்றது.

இவ் அமைப்பானது எருவில் மண்ணின் மைந்தர் சமூகசேவகர் அ.வசிகரன் அவர்களது சிந்தணையில் உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துள்ளவேளையில் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளமை பாராட்டத்தக்கது.இவ் அமைப்பின் உறுப்பினர்கள் மூலம் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.