காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிருமித் தொற்று நீக்கப்பட்டது.

(ரீ.எல்.ஜவ்பர்கான்) தீவிர கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 32 பொலிசாருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தற்காலிகமாகமாக பொலிஸ் நிலையத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.இப்பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முழமையான கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

இப் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 82 பொலிசாருக்கு பொலிசாருக்கு பீசீஅர் பரிசோதனைகள் மேற்கௌள்ளப்பட்டபோது 32 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த ஒரு வாரகாலமாக பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பணிகளை நிறுத்தியுள்ளதுதற்கமைய மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் இன்று காத்தான்குடி பொலிஸ் நிலையம் முழுமையாக கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.