அகப்பட்டது 9240 மதுபான போத்தல்கள்.

????????????????????????????????????

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 9240 மதுபான போத்தல்களை பாரவூர்தி (கனரக வாகனம்) ஒன்றில் ஏற்றிச் சென்ற இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சீதுவெ பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பாரவூர்தியை மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்னை சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த மதுபான போத்தல்களுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமாக 9240 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், மதுபான போத்தல்களின் பெறுமதி சுமார் 1.7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் வழிகாட்டலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பன்டார தலைமையிலான குழுவினரால் சட்டவிரோதமாக மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டது.

இசச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.