அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் இங்கினியாகலவில் தடுக்கப்பட்டு 48 பேர் கைது

பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்றிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸை அம்பாறை இங்கினியாகல பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு பொலிஸார் தடுத்து, அதில் பிரயாணித்த 48 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த குறித்த பஸ்ஸை  ஞாயிற்றுக்கிழமை (30)  இரவு இங்கினியாகல நாமல் ஓயா வீதியில்  பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டனர், இதன்போது பயணிகள் பயணக்கட்டுப்பாட்டை  மீறி கொழும்பு நோக்கி  செல்லவதாக கண்டறிந்ததை அடுத்து குறித்த பஸ்ஸில் பிரயாணம் செய்த மற்றும் பஸ் சாரதி, நடத்துனர் உட்பட அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 48 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.