யாஷ் சூறாவளி வடக்கு ஒரிசா மாநிலத்தை அடையும்.

யாஷ் சூறாவளி ஆனது இன்று (25.05.2021) பிற்பகல் 05.30 மணிக்கு செய்யப்பட்ட பகுப்பாய்வின்படி, மணிக்கு 15km/h வேகத்தில் கடந்த 06 மணித்தியாலத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்டது.

இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கு-வடகிழக்காக 1360 கிலோமீற்றர் தூரத்திலும்
 திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 1420 கிலோமீற்றர் தூரத்திலும்
PARADIP நகரிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 160 கிலோமீற்றர் தூரத்திலும்,
BALASORE நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 250 கிலோமீற்றர் தூரத்திலும்,
DIGHA நகரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 240 கிலோமீற்றர் தூரத்திலும்,
SAGAR தீவிலிருந்து 230 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்பட்டது.
இந்த சூறாவளியானது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (26.05.2021) காலை DHAMRA PORT அருகே வடக்கு ஒரிசா மாநிலத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வடக்கு ஒரிசாவிற்கும் மேற்கு வங்காளத்தின் கரையோரப் பகுதிக்கும் இடையில் PARADIP நகருக்கும் SAGAR தீவுக்கும் இடையே வடக்கு DHAMRA நகரத்திற்கும் தெற்கு BALASORE நகருக்கும் இடையே வலுவான சூறாவளியாக  (VERY SEVERE CYCLONICSTORM) நாளை மதியம்  (11.00AM – 01.30PM) மணியளவில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
  தகவல்
 கணபதிப்பிள்ளை சூரியகுமாரன்
ஓய்வுபெற்ற வானிலை அதிகாரி.